[X] Close

சத்தியமங்கலம்: சாலையோரம் நடமாடிய சிறுத்தை: அச்சத்தில் வாகன ஓட்டிகள்

சுற்றுச்சூழல்

Satyamangalam-Leopard-roaming-the-roadside-Motorists-in-fear

ஆசனூர் சாலையோர சிறுத்தை தென்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுப்பதை தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளை வனத்துறையினர் அறிவுறுத்தினர்.


Advertisement

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் சத்தியமங்கலம் வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம்.

image


Advertisement

இந்நிலையில் இன்று காலை சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆசனூர் அருகே சாலையோர வனப்பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடுவதை கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சிறுத்தை நடமாட்டத்தை கண்ட காரில் சென்ற நபர்கள் தங்களது செல்போனில் சிறுத்தை நடமாடுவதை வீடியோ எடுத்தனர்.

சிறுத்தை அதன் வாழ்விடத்தில் இருப்பதால் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அதனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுப்பதை தவிர்க்குமாறும் வாகன ஓட்டிகளை வனத்துறையினர் அறிவுறுத்தினர்.


Advertisement

Advertisement
[X] Close