[X] Close

சென்னை: நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

தமிழ்நாடு

Chennai-Five-people-were-killed-when-a-car-collided-with-a-parked-lorry

பெருங்களத்தூர் அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


Advertisement

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி. சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் செய்த 5 பேரும் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

image


Advertisement

விசாரணையில் காரில் வந்த புதுகோட்டைய சேர்ந்த ராகுல் கார்த்திக்கேயன், மேட்டூரை சேர்ந்தராஜஹரிஷ், சென்னை கே.கே.நகரை சேர்ந்த அரவிந்த் சங்கர், திருச்சியை சேர்ந்த அஜய், காரை ஓட்டி வந்த மேட்டூரை சேர்ந்த நவீன் என்பதும் தெரியவந்தது.

அப்பளம் போல் நொறுங்கிய காரை துண்டித்து உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close