[X] Close

தமிழகத்தில் ஒரேநாளில் 1,575 பேருக்கு கொரோனா: 20 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ்

1575-tested-corona-positive-in-Tamilnadu-within-24-hours

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,575 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


Advertisement

தமிழகத்தில் நேற்று 1,568 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில், இன்று 1,575 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1,61,231 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தினசரி ஒருநாள் பாதிப்பு 1,575ஆக உள்ளது. சென்னையில் நேற்று 162 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 167 ஆக உயர்ந்திருக்கிறது.

கொரோனாவால் இன்று 20 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,000ஆக உயர்ந்திருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் 17 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் இணைநோய்கள் இல்லாதோர் 4 பேர். 50 வயதுகுட்பட்டோர் 3 பேர்.


Advertisement

image

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 16,315 ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து 1,610 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,69,771 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் 2022 தேர்தலில் ஆம் ஆத்மிக்கு வெற்றி வாய்ப்பு - கருத்துக்கணிப்பில் தகவல் 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close