Published : 04,Sep 2021 03:11 PM

இரும்பு ஏணி வழியாக மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு: மன்னார்குடியில் சோகம்

Electricity-flows-through-the-iron-ladder-One-killed-Tragedy-in-Mannargudi

மன்னார்குடி அருகே மின்சாரம் பாய்ந்து ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே செருமங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகரன். இவரது உறவினர் அண்மையில் உயிரிழந்த நிலையில், படத்திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதற்கான பணியில் ஈடுப்பட்டிருந்த ராஜசேகரன் இரும்பு ஏணியை தூக்கி சென்றபோது மேலே சென்ற உயர் மின்னழுத்த கம்பி மீது ஏணி உரசியது. இதில் ஏணி வழியாக மின்சாரம் பாய்ந்து ராஜசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த வடுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த ராஜசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்