பேருந்தில் பயணிகளுக்கு இடையூறு: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கைது செய்து விடுவிப்பு

பேருந்தில் பயணிகளுக்கு இடையூறு: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கைது செய்து விடுவிப்பு
பேருந்தில் பயணிகளுக்கு இடையூறு:  பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கைது செய்து விடுவிப்பு
சென்னை மாநகரப் பேருந்தில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி அட்டகாசம் செய்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 8 பேரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.
அமைந்தகரை பேருந்து நிறுத்தத்தில் இருந்து பாரிமுனை நோக்கி 50 வழித்தட எண் கொண்ட மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. கீழ்ப்பாக்கம் செயிண்ட் ஜார்ஜ் பள்ளி பேருந்து நிறுத்தம் வந்ததும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 8 பேர் பேருந்தில் ஏறி தட்டி சத்தம் எழுப்பிக் கொண்டு சென்றனர். இதனையடுத்து நடத்துனர், பாதுகாப்பு பணியில் இருந்த டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரியிடம் கூறினார்.
அவர் 8 மாணவர்களையும் மடக்கிப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் 8 மாணவர்களின் பெற்றோர்களையும் வரவழைத்து எச்சரித்து எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com