[X] Close

ராணுவ விஷயங்களில் அரசியல் வேண்டாம் - காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கே.கே.மிஸ்ரா

இந்தியா

Congress-spokesperson-KK-Mishra-says-No-politics-in-military-matters-and-this-came-after-the-proposal-to-add-Gita-and-Arthashastra-in-Training-Curriculum

"கீதை மற்றும் அர்த்தசாஸ்திரத்தை ராணுவ பயிற்சிக்கான பாடத்திட்டத்தில் சேர்க்கும் திட்ட முன்மொழிவை நாங்கள் கண்டிக்கிறோம்” என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.


Advertisement

கீதை மற்றும் அர்த்தசாஸ்திரத்தை ராணுவ பயிற்சிக்கான பாடத்திட்டத்தில் சேர்க்க பாதுகாப்பு மேலாண்மைக் கல்லூரி திட்டமிட்டு அது தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. பழங்கால நூல்களில் சொல்லப்பட்டுள்ளதை தற்காலத்துடன் ஒப்பிட்டு அதை போர் யுக்திகள் உடன் பயன்படுத்த முடியுமா என அந்த ஆய்வு நடந்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. அதனடிப்படையில் பயிற்சியில் சேர்க்கவும் திட்டம் முன்மொழிய பட்டுள்ளதாம். 

இந்நிலையில் இதனை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது. 


Advertisement

“குறைந்தபட்சம் ராணுவ விஷயங்களிலாவது அரசியல் செய்யாமல் இருக்கலாம். இஸ்லாமிய மத்தை சார்ந்த ராணுவ வீரர்களின் துணையுடன் தான் கார்கில் போரை வென்றோம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். 

கீதை மற்றும் அர்த்தசாஸ்திரத்தை ராணுவ பயிற்சிக்கான பாடத்திட்டத்தில் சேர்க்கும் திட்ட முன்மொழிவை நாங்கள் கண்டிக்கிறோம்” என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மிஸ்ரா தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்கலாம் : 'கைகளை இழந்தாலும் நம்பிக்கையை இழக்கவில்லை' - 4 பதக்கங்களால் இதயங்களை கவர்ந்த சீன வீரர் 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close