[X] Close

ஓவல் டெஸ்ட் : மீண்டும் மைதானத்திற்குள் ஓடிவந்த ஜார்வோ!

விளையாட்டு

Again-Jarvo-entered-in-ground-this-time-as-a-bowler-for-India-against-England-in-The-ongoing-Oval-Test-on-Day-2

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் தற்போது நான்காவது போட்டி ஓவல் டெஸ்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆடுகளத்திற்குள் ரசிகர் ஒருவர் நுழைந்து அதகளம் செய்துள்ளார். 


Advertisement

image

இந்த ரசிகர் மூன்றாவது முறையாக இந்த தொடரில் ஆடுகளத்திற்குள் நுழைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. லார்ட்ஸ் மற்றும் ஹெட்டிங்கிலே மைதானத்தில் நடைபெற்ற போட்டியிலும் அவர் நுழைந்திருந்தார். 


Advertisement

ஓவல் டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியா பந்து வீசிய போது அவர் மைதானத்திற்குள் நுழைந்துள்ளார். 

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பேட் செய்தபோது 34-வது ஓவரில் அவர் மைதானத்தில் என்ட்ரி கொடுத்தார். அந்த ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். ஸ்ட்ரைக்கில் போப் நின்று கொண்டிருந்தார். பேர்ஸ்டோ எதிர்முனையில் நின்று கொண்டிருந்தார்.  அந்த ஓவரின் மூன்றாவது பந்தை உமேஷ் வீச தயாராக இருந்த போது அவருக்கு பின்பக்கமாக ஜார்வோ ஓடி வந்து பந்து வீசுவது போல ஆக்ஷன் செய்தார். அவர் வந்த வேகத்தில் பேர்ஸடோ மீது மோதி நின்றார். 

உடனடியாக பாதுகாவலர்கள் வந்து பேர்ஸ்டோவை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர். ஜார்வோவின் இயற்பெயர் டேனியல் ஜார்விஸ் என சொல்லப்படுகிறது. 


Advertisement

அவரது என்ட்ரியை ரசிகர்கள் ரசித்தாலும் கிரிக்கெட் விமர்சகர்கள் பாதுகாப்பு சூழல் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். ‘தனக்கு இந்திய அணி தான் பிடிக்கும்’ என தெரிவித்துள்ளார் ஜார்வோ. அதனால் தான் இந்தியாவுக்காக பேட் செய்யவும், பவுலிங் செய்யவும் களமிறங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்கலாம் : 'கைகளை இழந்தாலும் நம்பிக்கையை இழக்கவில்லை' - 4 பதக்கங்களால் இதயங்களை கவர்ந்த சீன வீரர் 


Advertisement

Advertisement
[X] Close