[X] Close

தமிழக மீனவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை - இலங்கை மீனவர்கள் மீது வழக்கு

வீடியோ ஸ்டோரி

நடுக்கடலில் கத்தியை காட்டி மிரட்டி தமிழக மீனவர்களிடம் இருந்து வலைகள் மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை கொள்ளை அடித்து சென்ற இலங்கை மீனவர்கள் மீது வேதாரண்யத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Advertisement

வேதாரண்யம் அருகே கோடியக்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஆறுகாட்டுத்துறைச் சேர்ந்த சங்கர் மற்றும் சிவக்குமாரின் படகுகளில் தலா 4 பேர் மீன்பிடித்து கொண்டிருந்தனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே 15 கிலோமீட்டர் தொலைவில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது, இரண்டு படகுகளில் வந்த ஆறு இலங்கை மீனவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி, சங்கர் படகிலிருந்து வலைகள் மற்றும் சிவக்குமார் படகிலிருந்து வாக்கிடாக்கி, ஜிபிஎஸ் கருவி, டீசல் உள்ளிட்ட பொருட்களை பறித்து கொண்டு விரட்டியடித்துள்ளனர்.

image


Advertisement

3லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி பொருட்களை இழந்து, நேற்று கரை திரும்பிய மீனவர்கள் இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து கொடிய ஆயுதத்தை பயன்படுத்தி கொள்ளையடித்ததாக இலங்கையைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 397 பிரிவின் கீழ் வேதாரண்யம் கடலோரக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: மாநிலங்களவை தேர்தல்: போட்டியின்றி எம்.பி ஆனார் எம்.எம்.அப்துல்லா


Advertisement

Advertisement
[X] Close