[X] Close

"டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்குதான் அழுத்தம் அதிகம்" - பாக்.கேப்டன் பாபர் அசாம்

விளையாட்டு

India-will-be-under-more-pressure-than-us-says-Pakistan-Captain-Babar-Azam

டி20 உலகக் கோப்பையில் எங்களுடன் மோதும் போட்டியில் இந்தியாவுக்கே அழுத்தம் அதிகம் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.


Advertisement

7-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தொடங்கி, நவம்பர் மாதம் 14 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரக நாடுகள் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ளது. சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி அக்டோபர் 24-ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது.

image


Advertisement

இது குறித்து பேட்டியளித்துள்ள பாபர் அசாம் "பாகிஸ்தான் அணியுடன் ஒப்பிடுகையில் இந்திய அணிக்கு போட்டி மீதான அழுத்தம் அதிகமாக இருக்கும். ஏனென்றால் கடைசியாக அவர்கள் டி20 போட்டிகளை விளையாடவில்லை. இப்போது இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அதன் பின்பு ஐபிஎல் தொடரில் பிசியாக இருப்பார்கள்.அதுவும் போட்டி நடைபெற இருக்கும் அமீரகம் எங்களுக்கு சொந்த நாடு போன்றது. அதனால் நாங்கள் எங்களுடைய 100 சதவிகித பங்களிப்பை கொடுப்போம்" என்றார்.

மேலும் பேசிய பாபர் அசாம் "அமீரகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக விளையாடி வருகிறோம். அதனால் அங்கிருக்கும் மைதானங்கள் எங்களுக்கு சொந்த நாட்டு ஆடுகளத்தை போன்றதுதான். அமீரகத்தில் நாங்கள் ஏற்கெனவே பல முக்கிய அணிகளை வீழ்த்தியுள்ளோம். அணியின் அனைத்து வீரர்களும் மிகவும் உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் இருக்கிறார்கள். அதனால் மிகவும் நம்பிக்கையுடன் டி20 உலகக் கோப்பையை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்" என்றார் அவர்.


Advertisement

Advertisement
[X] Close