
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி உள்ளது.
விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு அழுத்தம் கொடுக்கும் முனைப்புடன் களத்திற்கு வந்தனர் இந்திய அணி வீரர்கள்.
இந்நிலையில் பும்ரா இந்த ஆட்டத்தில் வீசிய இரண்டாவது ஓவரில் இங்கிலாந்து தொடக்க வீரர்கள் ரோரி பேர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீதை அவுட் செய்தார். இதில் பேர்ன்ஸை இன்சைட் எட்ஜ் முறையில் போல்ட் செய்தார் பும்ரா.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 99 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் பேர்ன்ஸ் மற்றும் ஹமீத் விக்கெட்டுகள் அடங்கும். அடுத்ததாக அவர் வீழ்த்தும் விக்கெட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் வீழ்த்தும் நூறாவது விக்கெட்டாக அமையும்.