[X] Close

சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 23000 ரன்களை குவித்து கோலி சாதனை!

விளையாட்டு

Indian-Skipper-Virat-Kohli-Makes-record-for-fastest-to-score-23000-runs-in-international-cricket-and-the-Milestone-came-against-England-At-Oval-Test-Today

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் களத்தில் ரன் வேட்டை ஆடுவது வழக்கம். இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஓவல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் முதல் ரன் எடுத்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் கோலி.  


Advertisement

image

ஒருநாள், டி20, டெஸ்ட் என சர்வதேச அளவில் மொத்தம் 490 இன்னிங்ஸ் விளையாடியுள்ள கோலி 23049 ரன்களை குவித்துள்ளார். இதில் 70 சதம், 117 அரை சதங்களை பதிவு செய்துள்ளார் கோலி. இதன் மூலம் அதிவேகமாக 23000 ரன்களை சர்வதேச கிரிக்கெட்டில் எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் 522 இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டியிருந்தார். 


Advertisement

கடந்த நவம்பரில் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 22000 ரன்களை குவித்திருந்தார். ஓவல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. கேப்டன் விராட் கோலி 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.


Advertisement

Advertisement
[X] Close