[X] Close

தொடர்ந்து தவிர்க்கப்படும் அஸ்வின் : கொதிப்படைந்த ரசிகர்கள் ட்விட்டரில் சரமாரி கேள்வி!

சிறப்புக் களம்

Indian-Cricketer-Ravichandran-Ashwin-not-included-in-the-playing-Eleven-against-England-and-this-for-the-fourth-time-in-a-row-in-this-5-match-Series-and-fans-got-angry-and-raised-questions-on-Twitter

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் இது வரை ஆடும் லெவனில் களம் இறக்கப்படவில்லை. டிரெண்ட் பிரிட்ஜ், லார்ட்ஸ், ஹெட்டிங்கிலே என்ற மூன்று போட்டிகளிலும் அஸ்வின் ஆடும் லெவனில் இடம் பெறவில்லை. இந்நிலையில், தற்போது ஓவலில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் ஆடும் லெவனில் நிச்சயம் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. 


Advertisement

image

ஆனால், அது மீண்டும் தவிர்க்கப்பட்டுள்ளது. ஓவல் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு கைக்கொடுக்கும் என சொல்லப்பட்டது. இருந்தாலும் அஸ்வின் அணியில் இடம் பெறவில்லை. ஆடும் லெவனில் இடம் பிடிப்பதற்கான காத்திருப்பு அஸ்வின் விஷயத்தில் தொடர்ந்து வருகிறது. 


Advertisement

அணியில் இரண்டு மாற்றம்!

ஓவல் டெஸ்டில் இந்திய அணி ஆடும் லெவனில் இரண்டு மாற்றங்களை செய்துள்ளது. ஷமிக்கு மாற்றாக ஷர்துல் தாக்கூரும், இஷாந்த் ஷர்மாவுக்கு மாற்றாக உமேஷ் யாதவும் இடம் பெற்றுள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட் உலகின் இரண்டாம் நிலை பவுலர், ஆல் ரவுண்டர்களில் நான்காம் இடத்திலும் உள்ளார் அஸ்வின். 

image  


Advertisement

அஸ்வின் குறித்து கோலி!

ஓவல் டெஸ்டில் டாஸுக்கு பிறகு அஸ்வின் அணியில் இடம் பெறாதது குறித்து கோலி வசம் கேட்டக்கப்பட்டது. “இப்போதைக்கு பார்ட்னர்ஷிப் அமைப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இங்கிலாந்து அணியில் நான்கு இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் ஜடேஜாவை தக்கவைத்துள்ளோம். ஜடேஜா நிச்சயம் நம்பர் 7 பேட்ஸ்மேனாக ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவார்” என்றார் கேப்டன் கோலி. 

ஆனால், கோலியின் கணக்கு முதல் இன்னிங்ஸில் தப்பு கணக்காகி உள்ளது. ஜடேஜா 10 ரன்களுக்கு அவுட்டாகி உள்ளார். ஒரு பேட்ஸ்மேனாக அவர் அணிக்கு முதல் இன்னிங்ஸில் கொடுத்துள்ள பங்களிப்பு இது தான். 

அஸ்வின் ஓரம் கட்டப்படுவது ஏன்? ரசிகர்கள் காட்டம்!

கிரிக்கெட் விமர்சகர்கள், பிரபலங்கள் தொடங்கி பலரும் ட்விட்டரில் அஸ்வின் அணியில் சேர்க்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். 

அவர்களது பதிவுகள் இங்கே அணிவகுக்கின்றன.

நடப்பு 2021-இல் மட்டும் ஆறு டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் விளையாடி உள்ளார். அதில் ஒரு சதம் பதிவு செய்துள்ளார் அவர். பவுலராக மொத்தம் 38 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார். 

2017-க்கு பிறகு அஸ்வின் சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடவில்லை. அப்போதிலிருந்தே இந்திய டெஸ்ட் அணியில் தவிர்க்க முடியாத வீரராக திகழ்ந்து வருகிறார் அஸ்வின் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

வாய்ப்புக்காக காத்திருப்பது கொடுமையிலும் கொடுமையான கொடுமை.

இதையும் படிக்கலாம் : இந்திய அணிக்கு ஏன் இவ்வளவு சொதப்பல்.. அஸ்வினை எடுக்காமல் கோலி தவறு செய்துவிட்டாரா? 


Advertisement

Advertisement
[X] Close