[X] Close

களைகட்டிய புஞ்சைபுளியம்பட்டி சந்தை.. ஒரே நாளில் ரூ.2 கோடி மதிப்பிலான கால்நடைகள் விற்பனை

வீடியோ ஸ்டோரி

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி கால்நடைச் சந்தையில் இரண்டு கோடி ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனையாகியுள்ளன.


Advertisement

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் உள்ள கால்நடை சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சந்தையாக விளங்குவது புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தை. இந்த சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம்.

image


Advertisement

இந்த நிலையில், இன்று புஞ்சைபுளியம்பட்டி கால்நடைச் சந்தைக்கு 40 எருமைகள், 600 கலப்பின மாடுகள், 300 ஜெர்சி மாடுகள், 100 வளர்ப்பு கன்றுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் வந்திருந்தனர். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க விவசாயிகள் சந்தையில் குவிந்தனர். எருமைகள் 16ஆயிரம் முதல் 38 ஆயிரம் ரூபாய் கறுப்பு வெள்ளை மாடு 22 ஆயிரம் முதல் 47 ஆயிரம் ரூபாய், ஜெர்சி 23 ஆயிரம் முதல் 52 ஆயிரம், சிந்து15 ஆயிரம் முதல் 39 ஆயிரம், நாட்டுமாடு 40 ஆயிரம் முதல் 69 ஆயிரம் ரூபாய் வரை வளர்ப்பு கன்றுகள் 5000 முதல், 14 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனையானது.

சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 1000க்கும் மேற்பட்ட மாடுகள் ரூபாய் 2 கோடிக்கு விற்பனையானது. தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் தீவனத்துக்கு பிரச்சனை இருக்காது. இதனால் கறவை மாடுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு மாடுகளை வாங்கி செல்வதாகவும், கடந்த வாரத்தை விட இந்தவாரம் மாடுகளின் வ ரத்து அதிகரித்துள்ளதாகவும்

வியாபாரிகள் தெரிவித்தனர். கொரோனா சமயத்தில் விற்பனை மந்தமான நிலையில் தற்போது மழை பெய்துள்ளதால் கறவை மாடுகள் விற்பனை சூடு பிடித்ததால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close