[X] Close

’ஜல்லிக்கட்டு போல நீட் தேர்வுக்கு எதிராக போராடுங்கள்’: வைகோ

-Fight-Against-Need-Test-Like-Jallikattu---Vaiko

ஜல்லிக்கட்டுக்கு போராடியது போல நீட் தேர்வுக்கு எதிராகவும் மாணவர்கள் போராட வேண்டும் என மதிமுக பொது செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். 

மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையில், மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு வழங்கப்பட்ட 85 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்தை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. 

இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வைகோ, நீட் விவகாரத்தில் நீதிமன்றத்தில் சமூகநீதி சாகடிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார். ஜல்லிக்கட்டுக்கு போராடியது போல நீட் தேர்வுக்கு எதிராகவும் மாணவர்கள் போராட வேண்டும் என்ற அவர், ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் பாரதிய ஜனதாவுக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவளித்திருக்க‌மாட்டார் என்றும் சொன்னார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close