ஜிஎஸ்டியால் கலங்கி நிற்கும் காஞ்சி பட்டு

ஜிஎஸ்டியால் கலங்கி நிற்கும் காஞ்சி பட்டு
ஜிஎஸ்டியால் கலங்கி நிற்கும் காஞ்சி பட்டு

காஞ்சிபுரத்தில் உள்ள பட்டு கூட்டுறவு சங்கங்களில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் பட்டுச்சேலைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால், 65 சதவீதம் வரை தள்ளுபடி செய்து, பட்டுச்சேலைகளை விற்பனை செய்யலாம் என சங்கங்களுக்கு கைத்தறி துறை அனுமதி வழங்கியுள்ளது.

பட்டு நகரம் என்றாலே காஞ்சிபுரம்தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு நேர்த்தியும், அழகும் மிளிரும் காஞ்சிப்பட்டுகள் ஏராள‌மான திருமணங்களையும் சுப நிகழ்வுகளையும் அலங்கரிக்கின்றன. காஞ்சிப்பட்டின் பெயரில் தனியார் கடைகளும், போலிப் பட்டுச்சேலைகளும், ஒரிஜினல் பட்டின் விற்பனையை சரித்த நிலையில், இப்போது ஜிஎஸ்டி வரியும் பட்டுச்சேலைகளின் விற்பனையை குறைத்து தேக்கமடைய வைத்துள்ளதாக கூறுகிறார்கள் பட்டு ஜவுளி விற்பனையாளர்கள்

விற்பனை குறைவு காரணமாக தள்ளுபடியில் பட்டுச்சேலைகளை விற்க வேண்டிய நிலைக்கு பட்டு கூட்டுறவு சங்கங்கள் தள்ளப்பட்டுள்ளன. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 65 சதவிகித தள்ளுபடியில் விற்க கைத்தறித்துறை அனுமதி அளித்துள்ளது.

நலிந்த சங்கங்கள் முதல் பெரிய சங்கங்கள் வரை ஆறு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பட்டுச்சேலைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதில், நலிந்த சங்கங்களில் மட்டும், ஒன்றரை கோடி ரூபாய்க்கும் மேலான பட்டுச்சேலைகள் கையிருப்பில் உள்ளதாக கூறுகிறார்கள் சங்க நிர்வாகிகள். தேங்கி உள்ள பட்டுசேலைகளை அதிக தள்ளுபடியில் ‌விற்பதை தவிர்த்து நவீன முறைகளில் விற்க முயன்றால் நஷ்டத்தை தவிர்க்கலாம் என்கிறார்கள் நெசவாளர்கள்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com