[X] Close

"ஒருவேளை உணவுக்கே சிரமம்" - காலணி தயாரிக்கும் தொழிலில் உள்ளவர்களின் பரிதாப நிலை

வீடியோ ஸ்டோரி

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல என்பார்கள். அதைப்போல ஏற்கனவே நலிந்த நிலையில் இருந்த காலணி தயாரிப்பு தொழிலாளர்கள், கொரோனா காலத்திற்குப்பின் வேறு வேலைகளை தேட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கிறார்கள்.


Advertisement

சென்னை பெரம்பூர் மேட்டுப்பாளையம் பகுதியில் வசிக்கும் சுமார் 2 ஆயிரத்து 500க்கும் அதிக குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், பூர்வீகமாக காலணிகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுவருகிறார்கள். பிராட்வே சென்று மொத்தமாக லெதர் வாங்கி வந்து காலணிகளை தயார் செய்து வந்த இவர்கள், தாங்கள் தயாரித்த காலணிகளை கடைகளில் கொடுத்து அதற்கான தொகையை பெற்று தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர்.

பிராண்டட் காலணி நிறுவனங்கள் களத்தில் இறங்கிவிட்டபின், இவர்களின் தொழில் நலியத்தொடங்கிய நிலையில், கொரோனா காலகட்டம் இவர்களின் வாழ்க்கையை அடியோடு சாய்த்துவிட்டதாக வேதனைப்படுகிறார்கள். ஒருவேளை உணவுக்காக பட்ட சிரமங்கள், இவர்களின் குரலில் வேதனையாக தொனிக்கிறது.


Advertisement

தற்போதுள்ள சூழலில் ஒருநாளைக்கு ஒரு ஜோடி காலணிகள் விற்பனை செய்வதே சவாலாக இருப்பதாக கூறும் இந்த காலணி தயாரிப்புத் தொழிலாளர்கள், கைகளால் காலணிகளை தயாரிக்கும் தொழில் செய்வோரை கணக்கெடுத்து சிறப்பு உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள்.

இதனைப் படிக்க: முதல்வரின் தனிப்பிரிவில் நேரில் குவியும் மக்கள்.. இணையத்தில் மனு அனுப்ப அரசு அறிவுறுத்தல் 


Advertisement

Advertisement
[X] Close