[X] Close

’இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட பின்னும் கொரோனா வந்துவிட்டது’ - இயக்குநர் ஃபரா கான் கவலை

சினிமா

Bollywood-Cinema-Director-Farah-Khan-tested-positive-for-COVID19-and-she-was-infected-after-taking-two-doses-to-prevent-the-infection

பாலிவுட் சினிமாவின் பிரபல பெண் இயக்குனர் ஃபரா கானுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ள நிலையில் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை அவர் சமூக வலைத்தளத்தின் மூலம் தெரிவித்துள்ளார். 


Advertisement

image

“கொரோனாவை தடுப்பதற்கான இரண்டு டோஸ்களையும் நான் செலுத்திக் கொண்டேன். அதே போல தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுடன் தான் பணியாற்றினேன். இருந்த போதும் அந்த தொற்று என்னை அண்டி விட்டது. இது மிகவும் வினோதமாக உள்ளது” என தெரிவித்துள்ளார் அவர். 


Advertisement

தனக்கு தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து தன்னுடன் பணியாற்றிய கலைஞர்களையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளதாக தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிக்கலாம் : ஆப்கான் விமான நிலையங்கள் மூடல் : தரை வழி பயணமாக எல்லையை நோக்கி படையெடுக்கும் மக்கள்


Advertisement

Advertisement
[X] Close