[X] Close

தாமதத்தால் எழுந்த சர்ச்சை: நொய்டாவில் உணவக உரிமையாளரை சுட்டுக் கொன்ற டெலிவரி ஊழியர்

இந்தியா

Delay-in-delivering-the-ordered-food-and-due-to-that-a-Food-delivery-boy-who-shot-and-killed-a-restaurant-owner-in-Greater-Noida-of-India

ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து சாப்பிடும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தங்களது வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த உணவை கொடுப்பதில் தாமதம் செய்த நொய்டா உணவக உரிமையாளரை உணவு டெலிவரி பணி செய்யும் ஊழியர் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளார்.   


Advertisement

image

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் செப்டம்பர் 1-ஆம் தேதியான இன்று நடந்துள்ளது. 


Advertisement

வழக்கம் போல தங்களுக்கு வந்த ஆர்டரை கலெக்ட் செய்து கொண்டு செல்ல அந்த ஆன்லைன் தனியார் ஃபுட் டெலிவரி ஊழியர்கள் வந்துள்ளனர். அப்போது சுட்டுக் கொல்லப்பட்டவரின் உணவகத்தில் ஆர்டரை கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அது தொடர்பாக அங்கிருந்த ஊழியர்களுடன், ஃபுட் டெலிவரி பிரதிநிதிகள் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது, அந்த பிரச்னையில் உணவக உரிமையாளர் தலையிட்டுள்ளார். அப்போது ஃபுட் டெலிவரி ஊழியர்கள் தரப்பிலிருந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் உணவக உரிமையாளர் உயிரிழந்துள்ளார். 

போலீசார் நடத்திய விசாரணையில் இதற்கு காரணம் ஃபுட் டெலிவரி ஊழியர் ஒருவரும், அவருடன் இருந்த இருவரும் காரணம் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிக்கலாம் : உலக கடித தினம் இன்று : அரசியல் முதல் இலக்கிய உலகம் வரை.. கனலை மூட்டிய கடிதங்கள்! 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close