[X] Close

முதல்வரின் தனிப்பிரிவில் நேரில் குவியும் மக்கள்.. இணையத்தில் மனு அனுப்ப அரசு அறிவுறுத்தல்

தமிழ்நாடு

The-Government-of-Tamil-Nadu-requests-the-people-to-file-petitions-online-without-coming-in-person-to-the-CMO-Special-Cell-during-the-COVID19-period

தமிழ்நாடு தலைமை செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவில் தினந்தோறும் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. அந்த மனு மீது உரிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அண்மைய காலமாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் இலவச வீடு ஒதுக்கி கொடுக்குமாறு வேண்டி ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று மனு கொடுத்து வருகின்றனர். அதனால் அந்த பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரிவர பின்பற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக செய்தி மக்கள் தொடர்பு துறை தெரிவித்துள்ளது. 


Advertisement

image

அதோடு மக்கள் தங்கள் மனுவை இணையதளம் (http://cmcell.tn.gov.in/), மின்னஞ்சல் (cmcell@tn.gov.in) மூலமாகவும் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நேரடியாகவும், இணையம் மூலமாகவும் கொடுக்கின்ற மனுக்களை ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்றியே முதலமைச்சரின் தனிப்பிரிவில் பரிசீலிக்கப்படுகிறது. 


Advertisement

கொரோனா பெருந்தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்கும் வகையில் மக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்த்து இணையம் மூலம் முதலமைச்சரின் தனிப்பிரிவை அணுகலாம் என சொல்லப்பட்டுள்ளது. 

இதையும் படிக்கலாம் : உலக கடித தினம் இன்று : அரசியல் முதல் இலக்கிய உலகம் வரை.. கனலை மூட்டிய கடிதங்கள்! 


Advertisement

Advertisement
[X] Close