[X] Close

தமிழகத்தில் மேலும் 1,509 பேருக்கு கொரோனா உறுதி: 20 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ்

Covid-update-in-tamilnadu-today

தமிழகத்தில் இன்றைய தினம் மேலும் 1,509 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 1,512 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இன்று பாதிப்பு 3 பேருக்கு குறைந்துள்ளது. இவர்களில் சென்னையில் 177 பேரும், கோவையில் 186 பேரும் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement

கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி இன்று ஒரே நாளில் 20 பேர் (அரசு மருத்துவமனையில் 14 பேரும், தனியார் மருத்துவமனையில் 6 பேரும்) உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒருவர் இணை நோய் இல்லாத நபர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,941 என உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி: “கேரள எல்லையில் கண்காணிப்பை தீவிரமாக்குங்கள்” - தமிழக, கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவு


Advertisement

image

சென்னை, கோவை, ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு தலா நூறுக்கு மேல் உள்ளது. 1,54,718 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் 1,509 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இன்று ஒரேநாளில் 1,719 பேர் குணமடைந்து நலமுடன் வீடுதிரும்பியுள்ளனர். தற்போதைக்கு சிகிச்சையில் 16,620 பேர் உள்ளனர். அதேபோல இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 25,64,820 என்று உயர்ந்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close