
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மனைவி விஜயலட்சுமி காலமானதையடுத்து, அவருக்கு ஆறுதல் கூற சசிகலா மருத்துவமனைக்கு வருகை புரிந்தார்.
கடந்த ஒருவாரமாக உடல்நல குறைவால் சிகிச்சை பெற்றுவந்த ஓ.பி.எஸ் மனைவி விஜயலட்சுமி இன்று காலை மாரடைப்பால் காலமானார். இதையடுத்து சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், விஜயலட்சுமி உயிரிழந்த தனியார் மருத்துவமனைக்கு வருகை தந்த சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் தெரிவித்தார்.அப்போது, கண்கலங்கிய நிலையில் இருந்த ஓ.பி.எஸின் கரங்களை பிடித்து அவருக்கு ஆறுதல் கூறினார். மேலும், மறைந்த விஜயலட்சுமிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.
கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ச சிகலாவுக்கு எதிராக மெரினாவில் ஓ.பன்னீர்செல்வம் தியானம் மேற்கொண்டார். அவரது தர்மயுத்தத்தை தொடர்ந்து 4 ஆண்டுகளாக சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் ஒருவரையொருவர் நேருக்கு நேர் சந்ததேயில்லை. 4 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது இருவரும் சந்தித்துக்கொண்டனர். ஓ.பன்னீர்செல்வம் மெரினாவில் தியானம் மேற்கொள்வதற்கு முதல் நாள் சசிகலாவை கடைசியாக சந்தித்து குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: திமுக அரசிடம் பெருந்தன்மையை எதிர்பார்க்க முடியாது - டிடிவி தினகரன் விமர்சனம்