[X] Close

ஆப்கனிலிருந்து வெளியேறிய அமெரிக்க படைகள் - போர் முடிவுக்கு வந்துவிட்டதா?

உலகம்

Americas-longest-war-ended-ignobly

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைகள் முழுமையாக வாபஸ் பெறப்பட்டுள்ளன. இதுவரை அமெரிக்கா படைகள் பயன்படுத்திய ஆயுதங்கள் என்ன ஆனது? ஆப்கானிஸ்தானில் உண்மையாகவே அமெரிக்காவின் போர் முடிவுக்கு வந்துவிட்டதா என விரிவாக பார்க்கலாம்.


Advertisement

1989ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் நாள் 9 ஆண்டுகால போருக்கு பின்னர், சோவியத் யூனியனை சேர்ந்த வீரர்கள் அனைவரும் நாடு திரும்பியுள்ளனர். 30 ஆண்டுகளுக்கு பிறகு அதே வரலாறு திரும்பியுள்ளது. 20 ஆண்டுகால போருக்கு பின்னர் அமெரிக்க படையை சேர்ந்த கடைசி வீரர் ஆப்கன் மண்ணில் இருந்து புறப்பட்டார். அமெரிக்க தூதருடன் கடைசி விமானம் காபூலில் இருந்து புறப்பட்ட அந்த நொடி காபூல் விமானநிலையம் முழுமையாக தலிபான்கள் கட்டுக்குள் வந்தது. வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தலிபான்கள் விமான நிலையத்தினுள் வெற்றி அணிவகுப்பு நடத்தினர்.

image


Advertisement

ஆப்கானிஸ்தான் சுதந்திரம் அடைந்ததாக முழக்கமிட்டனர். காபூல் விமான நிலையத்தில் அமெரிக்கா 73 ராணுவ விமானங்கள், 70 ராணுவ வாகனங்கள் மற்றும் ராக்கெட் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் அமைப்பு ஆகியவற்றை விட்டு சென்றுள்ளது. இவை அனைத்தும் செயலிழக்க செய்யப்பட்டது என்றும் , தலிபான்களால் இவற்றை இயக்க முடியாது என்றும் அமெரிக்கா கூறுகிறது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 14ஆம் தேதி முதல் 1 லட்சத்து 23 ஆயிரம் பேரை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, ஆப்கன் மண்ணில் தங்கள் போர் முடிந்துவிட்டதாக கூறியுள்ளது. இதனிடையே தலிபான்கள் தங்களின் சிறப்பு ராணுவ படைப்பிரிவான பத்ரி 313 படைப்பிரிவினை கொண்டு காபூல் விமானநிலையத்தை பாதுகாத்து வருகின்றனர். மேற்கத்திய நாடுகளுக்கு இணையான ராணுவப் பிரிவை உருவாக்கும் நோக்கில் பத்ரி 313 படைப்பிரிவினை தலிபான்கள் உருவாக்கியுள்ளனர். 1,400 ஆண்டுகளுக்கு முன்பு, முகமது நபிகள் 313 வீரர்களை கொண்டு நடத்தியதாக நம்பப்படும் போரின் நினைவாக தலிபான்கள் இப்படைக்கு இவ்வாறு பெயரிட்டுள்ளனர்.

image


Advertisement

நவீன ஆயுதங்கள், ராணுவ உடை, பாதுகாப்பு கவசம் என தலிபான்களின் வழக்கமான தோற்றத்தில் இருந்து மாறுபட்டிருக்கும் இவர்களுக்கு ஹக்கானி அமைப்புதான் பல பயிற்சிகளை அளித்துள்ளது. அமெரிக்கா, ஆப்கன் ராணுவத்திற்கு வழங்கிய நவீன ஆயுதங்கள் அனைத்தும் இவர்களிடமே உள்ளன. காபூல் நகரமே தற்போது இவர்களின் பாதுகாப்பில்தான் இருக்கிறது. இது ஒருபுறமிருக்க , அனைத்து நாடுகளுடனும் சுமுக உறவை மேம்படுத்த விரும்புவதாக தலிபான்கள் கூறியுள்ளனர். ஆப்கானிஸ்தானுடன் உலக நாடுகளுக்கு தற்போதுதான் மறைமுக போர் உண்டாகி இருக்கிறது என்பதே உண்மை.


Advertisement

Advertisement
[X] Close