Published : 31,Aug 2021 10:40 PM

ஆபாச படங்கள் எடுத்து பணம் பறிக்கும் கும்பல் - சைபர் க்ரைம் விழிப்புணர்வு வீடியோ

Cyber-crime-police-made-a-awareness-video-of-pornography

சமூக வலைதளங்களில் நிர்வாணமாக பேசும்போது புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் மோசடி கும்பலிடம் சிக்காமல் இருக்க சைபர் கிரைம் போலீசார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் சைபர் கிரைம் மோசடி நூதன முறையில் நடந்து வருகிறது. சமீபத்தில் பேஸ்புக் மூலமாக நடைபெறும் மோசடிகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக சமீபத்தில் பெண்கள் பெயரில் பேஸ்புக் பக்கம் ஒன்றை உருவாக்கி ஆண்களை குறிவைத்து பணம் பறிக்கும் கும்பல் குறித்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு புகார்கள் குவிந்து வருகிறது.

இளம்பெண்களின் பெயரில் பேஸ்புக் ஐடி ஒன்றை உருவாக்கி, பேஸ்புக்கில் ஆண்களை குறிவைத்து நட்பழைப்பு கொடுப்பர், பேஸ்புக்கில் உள்ள பெண் புகைப்படத்தை பார்த்து ஆண்கள் அவர்களுடன் நட்பழைப்பை ஏற்று கொண்டு பின்னர் பழகி அந்த நபரின் செல்போன் எண்ணை பெற்று கொள்வார்.

image

இதனையடுத்து வாட்ஸ் ஆப் மூலமாக பெண் ஒருவர் ஆபாச வீடியோ கால் செய்து அவர்களையும் ஆபாசமாக நடந்து கொள்ளுமாறு கேட்டுகொள்வார். ஆசை வார்த்தையை நம்பி ஆபாசமாக அந்த நபர் வீடியோ காலில் இருக்கும் போது அதை பதிவு செய்கின்றனர்.

அதன்பின் அந்த பதிவு செய்த வீடியோவை வைத்து அந்த கும்பல் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். பணம் தரமறுத்தால் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அனுப்பிவிடுவோம் என மிரட்டுவதாக புகாரில் தெரிவித்துள்ளனர்.

ஜூலை மாதம் மட்டுமே இந்தியாவின் 95,680 கன்டென்டுகளை நீக்கிய கூகுள்!

இந்த மோசடியில் சிக்கி மருத்துவ மாணவர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் 5 லட்சம் ரூபாய் வரை பணத்தை இழந்தது தெரியவந்தது. இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து வடமாநில கும்பலை தேடி வருகின்றனர்.

image

இந்த மோசடியில் தொடர்ச்சியாக பல பேர் சிக்கி புகார் அளித்து வரும் நிலையில் சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

Greater Chennai Police awareness video :-#chennaicitypolice #greaterchennaipolice#chennaipolice pic.twitter.com/qZeZLGZpHK
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) August 31, 2021

அந்த வீடியோவில் சமூக வலைதளங்களில் பழக்கமாகி எண்களை பெற்று வாட்ஸாப் மூலமாக ஆபாச வீடியோ கால் செய்து, அதை பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டினால் உடனடியாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்க வேண்டும் எனவும் மானத்திற்கு பயந்து பணத்தை வழங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

சற்று முன்

எடிட்டர் சாய்ஸ்