Published : 11,Aug 2017 04:48 AM
மக்கள் வெளியேற உத்தரவு: எல்லையில் பதற்றம்!

சிக்கிம் மாநிலத்தில் சீன எல்லையையொட்டி உள்ள கிராம மக்கள் பத்திரமாக வெளியேற இந்திய ராணுவம் வலியுறுத்தியுள்ளது.
சிக்கிம் மாநிலத்தில் இந்தியா-பூட்டான்-சீனா எல்லைகளை இணைக்கும் டோக்லாம் என்ற பகுதியில் சீனா மேற்கொண்ட சாலை கட்டமைப்பு பணிகளை இந்திய ராணுவம் தடுத்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிக்கிம் மாநிலத்தில் சீன எல்லையையொட்டி உள்ள கிராம மக்கள் பத்திரமாக வெளியேற இந்திய ராணுவம் வலியுறுத்தியுள்ளது.
இதனால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.