Published : 31,Aug 2021 02:29 PM
ஓடும்போது திடீரென தீப்பற்றி எரிந்த கார்: சென்னையில் பரபரப்பு

சென்னை சூளைமேடு 100 அடி சாலையில் ஓடும் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து வடபழனி நோக்கி செல்லும் 100 அடி சாலையில் கார் ஒன்றில் இருந்து திடீரென கரும்புகை வெளியானது. இதைடுத்து காரை நிறுத்தியவுடன் காரின் முன்பக்கத்தில் திடீரென தீப்பற்றி உள்ளது.
காரை ஓட்டி வந்த முகப்பேரை சேர்ந்த சில்வியா, காரில் பற்றிய தீயை அணைக்க முடியாததால் தீயணைப்புத் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்த நிலையில், அங்கு வந்த கோயம்பேடு தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் 100 அடி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சூளைமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.