Published : 31,Aug 2021 11:56 AM
ஜெயலலிதா பல்கலைகழக இணைப்பு விவகாரம் - அதிமுகவினர் சாலை மறியல்

அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
ஜெயலலிதா பல்கலைகழகத்தை அண்ணாமலை பல்கலைகழக்கத்துடன் இணைக்கும் மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டத்திருந்த மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவையிலிருந்து வெளியேறிய அதிமுகவினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எதிர்கட்சி துணைதலைவர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். பின்னர் அனைவரும் காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.