[X] Close

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை அவனி லேகாராவின் வெற்றிக்கதை!

சிறப்புக் களம்

Success-Story-of-Indian-Para-Shooter-Avani-Lekhara-who-won-the-gold-at-Tokyo-Paralympics-2020-and-she-was-the-first-woman-sportstar-to-win-gold-in-Indian-Paralympics-History

இந்தியாவுக்காக சரித்திர சாதனையை படைத்துள்ளார் 19 வயதான இளம் வீராங்கனை அவனி லேகாரா. இந்தியாவின் அரை நூற்றாண்டு கால பாராலிம்பிக் வரலாற்றில் முதல் தங்கத்தை தட்டி தூக்கி வந்த சிங்கப் பெண் அவனி தான். பதக்கம் வெல்வதற்கான இறுதி சுற்றில் மொத்தம் 249.6 புள்ளிகளை பெற்று புதிய பாராலிம்பிக் சாதனையை படைத்ததோடு, உலக சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார்.  


Advertisement

image

யார் இவர்?


Advertisement

21-ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டில் பிறந்தவர் அவனி. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரை சேர்ந்தவர். எல்லா குழந்தைகளையும் போல ஆடி, ஓடி விளையாடி வந்துள்ள அவரை முடக்கி போட்டுள்ளது ஒரு கார் விபத்து. 

அந்த விபத்து நடந்த போது அவருக்கு 11 வயது. தண்டுவட பாதிப்பு காரணமாக வயிற்றுப் பகுதிக்கு கீழ் உள்ள உடல் பகுதி செயலிழந்து போயுள்ளது. அதனால் அவரது உடல் முடங்கி போயிருந்தாலும் துளி அளவு கூட நம்பிக்கையை இழக்கவில்லை. அவருக்கு பக்கத்தில் இருந்து ஊக்கம் கொடுத்துள்ளார் அவரது தந்தை. அவனியின் ‘சீக்ரெட் ஆப் தி எனர்ஜியும்’ (Secret of the Energy) அவர் தான். 

image


Advertisement

அபினவ் பிந்த்ரா இன்ஸ்பிரேஷன்!

முதலில் வில்வித்தை மற்றும் துப்பாக்கி சுடுதல் என இரண்டு விளையாட்டிலும் கலவையான பயிற்சி பெற்ற அவருக்கு துப்பாக்கி சுடுதலில் அதிக ஆர்வம் வர காரணம் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா தான். ‘A Shot At History’ என்ற அவரது புத்தகம் தான் அவனிக்கு அந்த விளையாட்டில் அதிக ஈடுபாட்டை உருவாக்கியுள்ளது. அபினவ் 2008 ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்றிருந்தார். இப்போது தனது மானசீக குருவின் வழியில் நடந்த அவனியும் அதே 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்று சரித்திரம் படைத்துள்ளார். 

image

இது ஆரம்பம் தான்!

“அனைத்து இந்தியர்களுக்கும் இந்த பதக்கத்தை சமர்பிக்கிறேன். இது வெறும் ஆரம்பம் தான். வரும் நாட்களில் பல போட்டிகள் நடைபெற உள்ளன, அதில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று வர உள்ளேன். நடப்பு பாராலிம்பிக்கில் இன்னும் மூன்று ஈவெண்டுகளில் பங்கேற்க வேண்டி உள்ளது. அதில் 100 சதவிகிதம் கவனம் செலுத்தி விளையாட உள்ளேன்” என தங்கப் பதக்கம் வென்ற பிறகு அவனி தெரிவித்துள்ளார். 

கொரோனா பொது முடக்கத்தின் போது பயிற்சி பெற முடியாமல் தவித்த அவர் வீட்டையே பயிற்சி கூடமாக மாற்றி பாராலிம்பிக்கில் கலந்து கொள்ள தயாராகி உள்ளார். 

கலப்பு ஏர் ரைபிள் Prone, மகளிர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் மற்றும் கலப்பு 50 மீட்டர் ரைபிள் Prone ஆகியவற்றில் அவன் டோக்கியோ பாராலிம்பிக்கில் பங்கேற்று விளையாட உள்ளார். வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் அதில் பங்கேற்க உள்ளார் அவர். 

வெற்றி நடை தொடரட்டும் அவனி!

இதையும் வாசிக்கலாமே : பாராலிம்பிக்கில் திரும்ப பெறப்பட்ட இந்திய வீரர் வினோத் குமாரின் பதக்கம்.. காரணம் என்ன?


Advertisement

Advertisement
[X] Close