Published : 30,Aug 2021 06:39 PM

எங்கள் குழந்தையின் சிகிச்சைக்கு உதவுங்கள்: ஓசூர் வந்த அமைச்சரிடம் கோரிக்கை வைத்த பெற்றோர்

Help-in-the-treatment-of-our-child-Parents-who-made-the-request-to-the-Minister-who-came-to-Hosur

ஓசூரில் முதுகெலும்பு தசைநார் வலுவிழந்து அவதிப்படும் 7 மாத பெண் குழந்தைக்கு உதவிட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம், பெற்றோர் நேரில் கோரிக்கை வைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜகன்நாத் - பிரியதர்ஷினி தம்பதியினர். இவர்களுக்கு 7 மாதத்தில் நித்தன்யா ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், எல்லா குழந்தைகளையும்போல ஆரோக்யமாக காணப்படும் இந்த குழந்தைக்கு, அரிய நோயான மரபணு குறைபாடு உள்ளதால் விரைவில் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில், தாமதமானால் குழந்தை உயிர்பிழைப்பது கடினம் எனவும், இந்த குறைபாடிற்கு இந்தியாவில் மருத்து இல்லாததால் வெளிநாட்டில் கிடைக்கும் தடுப்பூசியின் விலை 16 கோடி ரூபாய் என தெரியவந்திருக்கிறது. இதனால், குடிசை தொழில் செய்யும் இந்த தம்பதிகளுக்கு எட்டாத இடத்தில் உள்ள இந்த தொகையை திரட்ட தன்னார்வலர்கள் உள்ளிட்ட பிறரின் உதவியை கேட்டு கையேந்தி நிற்கின்றனர்.

image

இதையடுத்து ஓசூரை அடுத்துள்ள பாத்தகோட்டா கிராமத்தில், ‘மக்களை தேடி மருத்துவம்’ எனும் திட்டத்தை ஆய்வு மேற்கொள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் வருவதை அறிந்த நித்தன்யா ஸ்ரீயின் பெற்றோர் அமைச்சரை நேரில் சந்தித்து உதவிட கோரி மனு வழங்கினர். மனுவினை படித்து பார்த்த அமைச்சர் சுப்பிரமணியன், இந்த விபரம் குறித்து சட்டசபையில் பேசி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொள்வதாக கூறினார்

பெரும் தொகையை எதிர்பார்த்து காத்திருக்கும் பெற்றோர், குழந்தையின் மருத்துவ உதவிக்கு அரசு உதவிடும் என்றே எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதையும் படிக்கலாம்: கோவை: கதவுகளை திறந்து வைத்து தூங்குபவர்களின் வீடுகளை குறி வைத்து திருட்டு - 4 பேர் கைது

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்