[X] Close

பாராலிம்பிக்கில் திரும்ப பெறப்பட்ட இந்திய வீரர் வினோத் குமாரின் பதக்கம்.. காரணம் என்ன?

சிறப்புக் களம்

Indian-Para-Athlete-Vinod-Kumar-s-Bronze-Medal-in-Tokyo-Paralympics-was-announced-as-void-because-of-he-is-not-eligible-to-play-in-F52-Category-and-the-reason-was-here

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இந்திய தடகள வீரர் வினோத் குமார் வென்றிருந்த வெண்கலப் பதக்கம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அவர் பங்கேற்று விளையாடிய F52 பிரிவில் அவர் விளையாட தகுதியற்றவர் என சொல்லி பதக்கம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. 


Advertisement

வினோத் குமார் வட்டு எறிதலில் 19.91 மீட்டர் தூரம் வட்டை எறிந்து F52 பிரிவில் மூன்றாம் இடத்தை பிடித்து அசத்தியிருந்தார். அதன் மூலம் பதக்கம் அவருக்கு கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

image


Advertisement

வினோத் குமார்!

41 வயதான வினோத் குமார் முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர். பணியின் போது பனிச்சரிவில் சிக்கியதில் கால் முழுவதும் செயலிழந்துள்ளது. அதையடுத்து அவர் சொந்த ஊரில் பலசரக்கு கடை ஒன்றை வைத்து, நடத்தி வந்துள்ளார்.  

2016 ரியோ பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற தீபா மாலிக் தான் அவரது இன்ஸ்பிரேஷன். அப்போது முதல் விளையாட்டில் ஆர்வம் கொண்ட அவர் அதில் ஈடுபாட்டுடன் விளையாட ஆரம்பித்தார். ஒலிம்பிக் தளத்தின் தரவுகளின் படி கடந்த மார்ச் வாக்கில் அவர் F52 பிரிவில் பங்கேற்று விளையாட சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி அனுமதித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதியும் அந்த பிரிவில் அவர் விளையாட தகுதியானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

image

பதக்கம் திரும்பப் பெறக் காரணம் என்ன?

வழக்கமாக பாரா விளையாட்டு வீரர்கள் அவர்களது உடல் குறைபாட்டை வைத்தே குறிப்பிட்ட பிரிவின் கீழ் விளையாட அனுமதிக்க படுவார்கள். சம அளவிலான உடல் குறைபாடு உள்ள வீரர்கள் மட்டுமே ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு விளையாட வேண்டும் என்பதற்காக இந்த பிரிவு (CLASSIFICATION) ஏற்பாடு. 

வினோத் குமார் பங்கேற்று விளையாடிய பிரிவு F52. இந்தப் பிரிவின் கீழ் விளையாடுபவர்கள் தசைபலம் தளர்வு, கை, கால்களில் குறைபாடு மற்றும் முதுகு தண்டுவட பாதிப்பு மாதிரியான பாதிப்புகளை கொண்ட வீரர்களாக இருக்க வேண்டும். அது தான் அந்த பிரிவுக்கான விதி. 

அதை மேற்கோள் காட்டி வினோத் குமாரை மீண்டும் F52 பிரிவில் பங்கேற்று விளையாட தகுதி உள்ளவரா? என்பதை சோதிக்க வேண்டும் என அவருடன் போட்டியிட்ட போட்டியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

image

அதன் அடிப்படியடையில் மேற்கொண்ட சோதனையில் (ASSESSMENT) அவர் அந்த பிரிவின் கீழ் விளையாட தகுதியற்றவர் என போட்டியை நடத்தும் தொழில்நுட்ப வல்லுநர் குழு அறிவித்துள்ளது. அதனால் அவரது பதக்கம் திரும்பப் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பந்தப்பட்ட பிரிவின் கீழ் ஒரு வீரர் விளையாட தகுதி பெற்றவர் என்பதை ஒன்றுக்கு பல முறை சோதனையிடலாம். ஆனால் போட்டியில் பங்கேற்று விளையாடிய பிறகு இதை செய்வது கேள்வியை எழுப்பியுள்ளது. 

பல தடைகளை உடைத்து நாட்டிற்காக பதக்கம் வெல்பவர்களுக்கு விதிகளை மேற்கோள் காட்டில் முடக்குவது துரதிர்ஷ்டவசமானது. அதனால் போட்டிக்கு முன்பாக இதுபோன்ற தொழில்நுட்ப சோதனைகளை மேற்கொண்டு முடித்துவிட வேண்டும் என பலரும் வலியுறுத்துகின்றனர்.

இதையும் படிக்கலாமே... பாராலிம்பிக்: ஈட்டி எறிந்து இந்தியாவுக்காக இரண்டாவது தங்கத்தை வென்ற சுமித் அண்டில்


Advertisement

Advertisement
[X] Close