[X] Close

"ஆப்கனில் உள்ள 300 அமெரிக்கர்களை வெளியேற்றிவிடுவோம்" - அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்

உலகம்

We-Will-Evacuate-all-the-300-US-Nationals-Soon-who-was-in-Afghanistan-now-says-American-Foreign-Minister-Antony-Blinken

ஆப்கானிஸ்தானில் எஞ்சியுள்ள சுமார் 300 அமெரிக்கர்களை வெளியேற்றும் திறன் தங்கள் நாட்டுக்கு இருப்பதாக அமெரிக்க அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.


Advertisement

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகளை விலக்கிக் கொள்ள அதிபர் ஜோ பைடன் விதித்த கெடு நாளை முடிவடைகிறது. இதனையடுத்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதுபோன்ற சூழலில், காபூல் விமானநிலையம் அருகே நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலை உறுதி செய்வதற்கு முன்னர் அமெரிக்கப் படைகளை முற்றிலும் திரும்பப் பெறுவது தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்க்கென் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், கடந்த இரண்டு நாட்களாக ஆபத்தான பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது சூழல் மிகவும் அபாயகரமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், ஆப்கனில் எஞ்சியிருக்கும் 300 அமெரிக்கர்களையும் மீட்டு அழைத்துச் செல்லும் திறன் தங்களுக்கு இருப்பதாக ஆண்டனி தெரிவித்துள்ளார்.


Advertisement

http://www.puthiyathalaimurai.com/newsview/114194/-A-Hope-in-the-Dark----A-wonderful-film-about-the-plight-of-Afghan-refugees


Advertisement

Advertisement
[X] Close