[X] Close

கோவை: கதவுகளை திறந்து வைத்து தூங்குபவர்களின் வீடுகளை குறி வைத்து திருட்டு - 4 பேர் கைது

குற்றம்

Coimbatore-Four-people-including-two-women-have-been-arrested-for-serial-theft

கோவை வெரைட்டி ஹால் பகுதியில் கதவுளை திறந்து வைத்து தூங்குபவர்களின் வீடுகளை குறி வைத்து திருடிய 2 பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர்.


Advertisement

கோவையில் வீடுகள், கடைகளிலுள்ள செல்போன்கள் உள்ளிட்டவை தொடர்ந்து திருடுபோவதாக காவல் துறையினருக்கு புகார்கள் தொடர்ந்து வந்தன. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, சௌரியம்மாள், ரமேஷ், அந்து ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள் நான்கு பேரும், அதிகாலை நேரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களுக்குள் நுழைந்து திருடி வந்தது தெரியவந்துள்ளது. ஒருவேளை யாரேனும் பார்த்துவிட்டால், கோயிலில் கூழ் ஊற்றுவதற்காக நன்கொடை கேட்டு வந்திருப்பதாக கூறி தப்பித்துக்கொள்வர்.


Advertisement

இது போன்ற கும்பல்கள் தமிழகம் முழுவதும் இருப்பதால், வீட்டில் கூட்டமாக இருந்தாலும், தூங்கினாலும் கதவுகளை திறந்து வைக்க வேண்டாம் என காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.


Advertisement

Advertisement
[X] Close