இன்ஸ்டாவில் 13 மில்லியன் ஃபாலோயர்ஸ்: தென்னிந்திய நடிகர்களில் முதலிடத்தில் அல்லு அர்ஜுன்

இன்ஸ்டாவில் 13 மில்லியன் ஃபாலோயர்ஸ்: தென்னிந்திய நடிகர்களில் முதலிடத்தில் அல்லு அர்ஜுன்
இன்ஸ்டாவில் 13 மில்லியன் ஃபாலோயர்ஸ்: தென்னிந்திய நடிகர்களில் முதலிடத்தில் அல்லு அர்ஜுன்

இன்ஸ்டாகிராமில் தென்னிந்திய நடிகர்களில் அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட நடிகர்கள் பட்டியலில் 13 மில்லியன் ஃபாலோயர்ஸ்களைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளார் நடிகர் அல்லு அர்ஜுன்.

தெலுங்கின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். தனது மகள் அல்லு அர்ஹாவை அள்ளிக்கொஞ்சும் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிடுவார். அதோடு, தனது காதல் மனைவி சினேகா ரெட்டியுடனான புதுப்புது போட்டோஷூட்களையும் பகிர்ந்து ‘இவ்வளவு காதலுடன் இருக்கிறார்களே’ என்று காதல் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துவார். சமீபத்தில், இவர்களின் 10 ஆம் ஆண்டு திருமண தினத்தையொட்டி தாஜ்மஹாலில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். முன்னணி நடிகர் என்பதோடு, இவர் பகிரும் புகைப்படங்களுக்கும் இன்ஸ்டாவில் ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள்.

இந்த நிலையில், தென்னிந்திய நடிகர்களில் 13 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளார் அல்லு அர்ஜுன். நடிகைகளில் ராஷ்மிகா மந்தனா 20 மில்லியன் ஃபாலோயர்ஸ்களைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். அல்லு அர்ஜுனுக்கு அடுத்தப்படியாக விஜய் தேவாரகொண்டா 12 மில்லியன் ஃபாலோயர்ஸ்களையும், மகேஷ்பாபு 7 மில்லியன் ஃபாலோயர்ஸ்களையும் கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com