[X] Close

இன்னிங்ஸ் தோல்வியால் இந்திய அணியில் மாற்றம் இருக்குமா? ஓவல் மைதானம் எப்படி?- விரிவான அலசல்

சிறப்புக் களம்

Does-the-innings-defeat-against-England-make-the-Indian-Cricket-team-can-demoralise

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி லீட்ஸ் - ஹெட்டிங்கிலே டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இந்த தோல்வி இந்திய அணியை சோர்வடைய செய்யுமா? என்பதை அலசுவோம். 


Advertisement

image

இந்திய கிரிக்கெட் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது இந்தப் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதுவும் முதல் இன்னிங்ஸில் வெறும் 78 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகி இருந்தது இந்தியா. டாஸ் வென்று ஆட்டத்தை கோலி இழப்பது இது இரண்டாவது முறை. அதே போல இன்னிங்ஸ் தோல்வி பெறுவதும் இது இரண்டாவது முறை. இதற்கு முன்னதாக இதே இங்கிலாந்து அணிக்கு எதிராக லார்ட்ஸ் டெஸ்டில் கோலி தலைமையிலான அணி இன்னிங்ஸ் தோல்வி பெற்றிருந்தது. 


Advertisement

தோல்விக்கு பிறகு கோலி சொன்னது இது தான்?

“நான்காம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பவுலிங் யூனிட் எங்கள் மீது கொடுத்த அழுத்தம் அணியின் பேட்டிங் யூனிட்டை ஆட்டம் காண செய்தது. ஆடுகளம் பேட்டிங் செய்ய உகந்ததாக தான் இருந்தது. பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் லைன் எங்களை வலிய சென்று தவறு செய்ய வைத்தது. இங்கிலாந்து அணி பேட் செய்த போதும் ஆடுகளம் இப்படி தான் இருந்தது. அவர்கள் கொடுத்த இன்டன்ட்டை எங்களால் கொடுக்க முடியவில்லை. எங்களது பேட்டிங் வியூகங்கள் சிறப்பானதாக இல்லை. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற அவர்களுக்கு எல்லா தகுதியும் இருந்தது. 

டாப் ஆர்டர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்திருந்தால் பின்வரிசையில் வரும் பேட்ஸமேன்களுக்கு கை கொடுத்திருக்கும். எல்லா நேரமும் லோயர் எண்ட் பேட்ஸ்மேன்களால் அணியை காக்க முடியாது. இந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் நாங்கள் வெளிப்படுத்திய ஆட்டம் மட்டுமே எங்களுக்கு கிடைத்த பாசிட்டிவ். இந்தப் போட்டியில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு ஓவல் போட்டியை அணுகுவோம்” என தோல்விக்கு பிறகு கோலி தெரிவித்துள்ளார். 


Advertisement

image

தவறு என்ன?

கோலி சொன்னதை போல டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பான தொடக்கத்தை கொடுக்க தவறியதே தவறுக்கு முதல் காரணம். அதை முதல் அல்லது இரண்டாவது இன்னிங்ஸில் செய்திருந்தால் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை கூட தவிர்த்திருக்கலாம். 

அணித்தேர்வில் மாற்றம் தேவையா?

இந்திய அணியின் ஆடும் லெவனில் மாற்றம் தேவை என சொல்லப்பட்டு வருகிறது. குறிப்பாக அஸ்வினை ஆடும் லெவனில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மறுபக்கம் ரகானே மற்றும் ரிஷப் பண்டை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற குரலும் எழுகின்றன. இதில் ரகானே கடந்த ஐந்து இன்னிங்ஸில் ஒரு அரைசதம் மட்டுமே பதிவு செய்துள்ளார். பண்ட் ஐந்து இன்னிங்ஸில் 87 ரன்களை மட்டுமே பதிவு செய்துள்ளார். அதனால் பண்டை நீக்க வேண்டும் என சொல்லப்பட்டு வருகிறது. 

image

இந்தியாவுக்கு ஓவல் மைதானம் எப்படி?

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக இதுவரை 13 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஓவல் மைதானத்தில் விளையாடி உள்ளது. அதில் இங்கிலாந்து 5 வெற்றியும், இந்தியா 1 வெற்றியும் பதிவு செய்துள்ளன. ஏழு போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. இந்தியா கடைசியாக இந்த மைதானத்தில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. அதில் இரண்டு போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்துள்ளது. 

தற்போதைய இந்திய அணியில் ஓவல் மைதானத்தில் விளையாடி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலராக முன்னிலையில் உள்ளார் இஷாந்த் ஷர்மா. பேட்ஸ்மேன்களில் கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் என இருவரும் 2018-இல் இந்த மைதானத்தில் சதம் பதிவு செய்துள்ளனர். கோலி, புஜாரா மற்றும் ரகானே இந்த மைதானத்தில் அரை சதம் கூட பதிவு செய்ததில்லை. இதையெல்லாம் அடிப்படையாக வைத்தே வரும் ஆட்டத்திற்கான அணித்தேர்வு அமையும். அது நிச்சயம் வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என நம்புவோம். 

“இந்த தோல்வி எங்களை சோர்வடைய செய்யாது. இதே தொடரின் முதல் இரண்டு ஆட்டத்தில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தி உள்ளோம். நிச்சயம் அடுத்த போட்டியில் சிறப்பான கூட்டணி அமைத்து ரன்களை சேர்ப்போம்" என கோலி தெரிவித்துள்ளார். அது நடக்கட்டும். 


Advertisement

Advertisement
[X] Close