[X] Close

இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகமாகும் விவோ X70 சீரிஸ் போன்கள் - சிறப்பம்சங்கள் என்னென்ன?

டெக்னாலஜி

Vivo-X70-Series-Smartphone-expected-to-launch-in-India-by-next-month-and-the-specification-about-the-series-was-leaked-now

விவோ நிறுவனத்தின் X70 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஐபிஎல் தொடரை முன்னிட்டு அடுத்த மாதம் இந்தியாவில் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் இந்த போன்களின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாக X60 சீரிஸ் போனை இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது விவோ. 


Advertisement

image

X70, X70 புரோ மற்றும் X70 புரோ+ என மூன்று மாடல்கள் வெளியாக உள்ளன. இந்த ஆண்டின் பிற்பாதியில் இந்தியாவில் X70t matrum X70t புரோ போன்கள் அறிமுகமாக உள்ளன. இந்நிலையில் அதன் சிறப்பம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. 


Advertisement

X70 போன் 6.56 இன்ச் ஃபுள் HD மற்றும் AMOLED டிஸ்பிளே இடம்பெற்றிருக்கும் என தகவல் கிடைத்துள்ளது. 4,400mAh பேட்டரி, ரியர் சைடில் மூன்று கேமரா, மீடியாடெக் டைமென்சிட்டி 1200 புராஸசர் மாதிரியானவை இடம் பெற்றுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. 

X70 புரோ மாடல் போனில் ரியர் சைடில் நான்கு கேமராக்கள் இடம் பெற்றிருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. மற்றப்படி டிஸ்பிளே, பேட்டரி மாதிரியானவற்றில் பெரிய மாற்றங்கள் எதுவும் இலை. 

X70 புரோ+ மாடலில் 6.78 இன்ச் கர்வ்டு (CURVED) OLED டிஸ்பிளே, 4,500mAh பேட்டரி மற்றும் புராஸசர் மாதிரியானவை மாறுகின்றன. இந்த மூன்று மாடல் போன்களும் மூன்று வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close