Published : 28,Aug 2021 07:34 PM

தமிழகத்தில் ஒரேநாளில் 1,551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

1551-tested-corona-positive-in-Tamilnadu

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,551 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் நேற்று 1,542 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில், இன்று 1,551 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1,63,230 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தினசரி ஒருநாள் பாதிப்பு 1,551ஆக உள்ளது. சென்னையில் நேற்று 162 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 182 ஆக அதிகரித்திருக்கிறது.

கொரோனாவால் இன்று 21 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,856 ஆக உயர்ந்திருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் 12 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 9 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் இணைநோய்கள் இல்லாதோர் 3 பேர். 50 வயதுக்குட்பட்டோர் ஒருவர்.

image

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 17,559ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து 1,768 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,57,884 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்