Published : 28,Aug 2021 07:31 PM

"காற்று மாசுபாட்டினால் அதிகரிக்கும் மனநோய் ஆபத்து" - எச்சரிக்கும் புதிய ஆய்வு

-Increased-risk-of-mental-illness-due-to-air-pollution----new-study-warns

காற்று மாசுபாடு தீவிரமடைவதன் காரணமாக ஸ்கிசோஃப்ரினியா மற்றும் மன அழுத்தம் போன்ற தீவிர மனநலப் பிரச்னைகளின் அபாயம் அதிகரிக்கும் என்று இங்கிலாந்தில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வின் முடிவுகளை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

பிரிட்டிஷ்ஜர்னல்ஆஃப்சைக்கியாட்ரியில்வெளியிடப்பட்டஇந்த ஆய்வுலண்டனில்உள்ள 13,000 பங்கேற்பாளர்களைகொண்டு நடத்தப்பட்டது. மனநலஆரோக்கியத்தில்காற்றுமாசுபாடுமோசமானதாக்கத்தை உருவாக்குகிறது எனகடந்தகாலங்களில்பலவிஞ்ஞானிகள்கூறியதைஇந்த ஆய்வுமேலும்வலுப்படுத்துகிறது.

image

இந்த ஆய்வு பற்றிய முக்கிய விவரங்கள்:

 • இந்த ஆய்வுக்கு 15 வயதுக்குமேற்பட்ட 13,887 பேர்தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 • 2008 மற்றும் 2012ஆம் ஆண்டுக்குஇடையில்மனநோய்மற்றும்மனநிலை பிரச்னைகள் உள்ளவர்களை இந்த ஆய்வுக்காக NHS (தேசியசுகாதாரசேவைகள்) ஆராய்ச்சியாளர்கள்தேர்ந்தெடுத்தனர்.
 • இந்த பங்கேற்பாளர்களின்குடியிருப்புபகுதிகளில்உள்ள காற்றுமாசுபாட்டின்அளவு, குறிப்பாக நைட்ரஜன்டைஆக்சைடு (NO2), நைட்ரஜன்ஆக்சைடுகள் (NOx) மற்றும்துகள்கள் (PM2.5 மற்றும் PM10) ஆகியவற்றின் அளவுகள்பதிவுசெய்யப்பட்டது.
 • ஆய்வில் பங்கேற்றவர்களின்மருத்துவமனைஅனுமதிமற்றும் அவர்களின் உடல்நிலை மாறுபாடுகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன.

ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டவை:

 • ஆய்வில்அதிகஆபத்துகாற்றில்உள்ளநைட்ரஜன்டைஆக்சைடு (NO2) மூலமாக ஏற்படுவதுகண்டறியப்பட்டது.
 • காற்றில் உருவாகும் நைட்ரஜன்டைஆக்சைடின் (NO2) ஒருசிறியவெளிப்பாடுகூட, ஒருவருடத்திற்குபிறகுமனநல பிரச்னைகளை உருவாக்கும். காற்றில் உள்ள நைட்ரஜன் டை ஆக்சைடு மனநல நோயாளிகளின்ஆபத்தில் 32 சதவிகிதம்அதிகரிப்புக்குவழிவகுத்தது. இது நோயாளிகள் மருத்துவமனையில்அனுமதிக்கப்படும்அபாயத்தை 18 சதவிகிதம்அதிகரிக்கிறது என்றும்அவர்கள்கணித்தனர்.
 • பிஎம்5 மாசுபாடு காரணமாகமனநல பிரச்னைகளால் மருத்துவமனையில்அனுமதிக்கபடுவது 11 சதவிகிதம் அதிகரிக்கிறது. மேலும் இது சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின்எண்ணிக்கையை 7 சதவிகிதம்அதிகரிக்கிறது என்று கண்டறிந்தனர்.

image

இந்த ஆய்வுகள் ஏன் முக்கியம்?

 • சமீபத்தியஆண்டுகளில், நமதுஉடல்நலத்தின்பல்வேறுஅம்சங்களில்காற்றுமாசுபாடு பல்வேறு தாக்கங்களை உருவாக்குகிறது.மேலும்ஒவ்வொருஆய்விலும்காற்று மாசுபாட்டுக்கும், மனநலன் பாதிப்புக்குமான இணைப்புவலுவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
 • இந்தகுறிப்பிட்டஆய்வில்ஆராய்ச்சியாளர்களின் நோக்கம், மனநலஆரோக்கியம் மற்றும் காற்றுமாசுபாட்டின்இணைப்பைநிறுவுவதுமட்டும் அல்ல. இது இரண்டுக்குமான தொடர்பு "உயிரியல்ரீதியாகசாத்தியமானது" என்பதைநிறுவுவதாகும்.
 • இந்த ஆய்வின்ஆராய்ச்சியாளர்கள், இந்தகண்டுபிடிப்புகள்வளர்ந்தநாடுகளில்உள்ளபெரும்பாலானநகரங்களுக்குபொருந்தும்என்றும், அனைத்து நாடுகளும் காற்றுமாசுபாட்டைக்குறைப்பதற்குஅர்த்தமுள்ளநடவடிக்கைகளை எடுக்கவேண்டியதுஅவசியம் என்றுவலியுறுத்துகின்றனர்.
 • உலகப்பொருளாதாரத்திற்குகாற்றுமாசுபாடு குறித்து மதிப்பீடுசெய்யும்போது, அதில் மனநலன் சார்ந்த பிரச்னைகள்குறித்து கவனம் செலுத்த கொள்கைவகுப்பாளர்களைஇந்தஆய்வுதூண்டும்என்றுஅவர்கள்நம்புகிறார்கள்.

ஈரோடு: வாய்க்கால்களில் மருத்துவ கழிவுகளை கொட்டும் ஸ்கேன் சென்டர் - மக்கள் அவதி

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்