[X] Close

காட்டு யானை பாகுபலிக்கு கால்களில் காயம்: நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் திட்டம்

தமிழ்நாடு

A-wild-elephant-roaming-around-Mettupalayam-has-injured-its-legs
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றித் திரியும் காட்டு யானை பாகுபலிக்கு கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது.
 
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தன்னந்தனியே சுற்றி வரும் யானை பாகுபலி கடந்த ஒரு மாதமாக மேட்டுப்பாளையம் பகுதியில் தென்படாத நிலையில் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் நடமாட துவங்கியுள்ளது. அவ்வழியே பயணித்த சிலர் கைப்பேசி மூலம் படமெடுத்து வீடியோவாக பகிர்ந்துள்ளனர். பாகுபலிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதும், வேகமாக நடக்க இயலாமல் தவிப்பதும் அந்த வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பாகுபலி நடமாட்டத்தைக் கண்காணிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
 
 

Advertisement

Advertisement
[X] Close