[X] Close

லீட்ஸ் டெஸ்டில் மேஜிக்கை நிகழ்த்துமா இந்திய அணி? சாத்தியமான வாய்ப்புகள் என்னென்ன?

சிறப்புக் களம்

Does-Team-India-has-a-chance-to-make-an-impact-in-Leeds-Headingley-Test-Cricket-Match-against-England-If-they-do-this

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்டிங்கிலே மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 354 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தற்போது இந்தியா அந்த ரன்களை டிரையல் செய்து விளையாடி வருகிறது.  


Advertisement

image

இந்தியாவுக்கு இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளதா?


Advertisement

நிச்சயம் இந்தியா இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தலாம்... இதெல்லாம் நடந்தால். இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடியாக வேண்டும். இந்தியா ஏன் உலகின் தலைசிறந்த அணி என்பதை நிரூபிக்கும் வகையில் அந்த ஆட்டம் இருக்க வேண்டும். ரோகித், ராகுல் என இருவரும் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் ஏமாற்றம் தந்துள்ளனர். ரோகித் அரை சதம் கடந்து அவுட்டானார். 

புஜாரா, கோலி, ரகானே என வரிசையாக மூவரும் பொறுப்புடன் விளையாட வேண்டும். இதில் புஜாரா தனது இயல்பான ஆட்டத்தை விளையாடி இங்கிலாந்து அணியினரை களைப்படைய செய்ய வேண்டும். மறுபக்கம் கோலி சதத்தை பதிவு செய்தாக வேண்டும். நெருக்கடியான நேரத்தில் துடிப்புடன் களத்தில் விளையாடும் குணம் படைத்தவர் கோலி. தொடர்ந்து வரும் ரகானே இந்தப் போட்டியில் ஏதாவது நம்மால் முடிந்தவரை செய்து கொடுக்க வேண்டும் என்ற மைண்ட் செட்டுடன் விளையாட வேண்டும். அடுத்து வரும் பண்ட் தனது துள்ளலான ஆட்டத்தை ஆடினால் அணிக்கு பலம். எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனாக அணியில் இடம் பிடித்துள்ள ஆல் ரவுண்டர் ஜடேஜாவும் நல்ல இன்னிங்ஸ் விளையாட வேண்டும். 

image


Advertisement

அதோடு லார்ட்ஸ் போட்டியை போல இந்திய அணியின் டெயில் எண்டர்கள் தங்களது பங்களிப்பை கொடுக்க வேண்டியுள்ளது. இதெல்லாம் கைகூட இந்தியா முதலில் இங்கிலாந்தின் முன்னிலையான 354 ரன்களை அதிகபட்சம் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு கடக்க வேண்டும். இந்தியா 34 ரன்களை எடுத்த போதே முதல் விக்கெட்டை இழந்து விட்டது.  ரோகித் 59 ரன்களில் அவுட். இந்தியா இனி ஒரே ஒரு விக்கெட்டை கூட இழக்கக்கூடாது. 

அப்படி அதை செய்து விட்டாலே இந்திய வீரர்கள் இயல்பாக விளையாடுவார்கள். மனதில் எந்த அழுத்தமும் இருக்காது. மறுபக்கம் அழுத்தம் அனைத்தும் இங்கிலாந்து வீரர்கள் மீது படரும். லார்ட்ஸ் டெஸ்டில் அவர்கள் அழுத்தத்தை கையாண்ட விதத்தை பார்த்திருந்தோம். இந்தப் போட்டியிலும் அவர்கள் மீது இந்தியா பிரஷர் கொடுத்தால் தவறு செய்வார்கள். 

image

பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டும்!

புஜாரா, கோலி, ரகானே என மூன்று பேட்ஸ்மேன்களில் இருவராவது பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டும். 

ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் நடைபெற்று வரும் மூன்றாவது போட்டி இது. முதல் போட்டியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. மழை இந்தியாவின் வெற்றி வாய்ப்பை வாஷ் அவுட் செய்தது. இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 50 : 50 என்ற பாணியில் விளையாடின. அதுவும் அந்த போட்டியின் கடைசி நாளன்று ஆட்டத்தின் போக்கையே இந்தியா மாற்றி இருந்தது. ஆனால் மூன்றாவது போட்டியின் முதல் நாள் முதல் செஷனில் இருந்தே இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பவுலிங், பேட்டிங் என அனைத்தும் அந்த அணிக்கு அட்டகாசமாக உள்ளது. இந்தியாவுக்கு முதல் இன்னிங்ஸில் எதுவும் கைகொடுக்கவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் விளையாடினால் மீண்டும் ஆதிக்கம் செலுத்தலாம்.

பாகுபலி முதல் பாகத்தில் வரும் காலகேயர்கள் உடன் மகிழ்மதி வீரர்கள் போரிட்டதை போல இந்திய அணி களத்தில் சமர் செய்தாக வேண்டும். 'தோல்வி' என்பதை விரட்டி அடிக்கும் விதமாக இந்தியாவின் சமர் இருக்க வேண்டும். 

அதுவும் இந்தப் போட்டியில் இன்னும் ஏழு செஷன்கள் எஞ்சியுள்ளன. அதில் ஒரு ஆறு செஷனாவது இந்தியா பேட் செய்ய வேண்டும். ஆட்டத்தில் வெற்றி அல்லது டிரா என்பதை காட்டிலும் அதை செய்தாலே இந்திய அணிக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி கிட்டியதை போல தான். 

image

ஆனால் அதை செய்வது அவ்வளவு எளிதல்ல. ஆண்டர்சன், ராபின்சன், ஓவர்டன், சாம் கர்ரன், மொயின் அலி, ரூட் என பவுலிங் படையை இந்தியா கவனமுடன் அணுக வேண்டும். அதன் மூலம் 500 ரன்களுக்கு மேல் எடுத்தால் நிச்சயம் இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு இந்த ஆட்டத்தில் உள்ளது என சொல்லலாம்.  

கடந்த காலங்கில் முதல் இன்னிங்ஸில் பின்தங்கிய அணிகள் அந்த மேஜிக்கை செய்து காட்டியுள்ளன. இப்போது கோலி தலைமையிலான இந்திய அணி அதை செய்தாக வேண்டும். இதற்கு முன்பு இங்கிலாந்து மண்ணில் ஓல்டு டிராஃபோர்ட் (Old Trafford ). மைதானத்தில் இந்திய அணி நிகழ்த்தியும் காட்டியிருக்கிறது. 


Advertisement

Advertisement
[X] Close