[X] Close

வெளியானது கூகுள் குட்டப்பா படத்தின் டீஸர்

சினிமா

Koogle-Kuttapa-Teaser-released

கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து, நடித்துள்ள 'கூகுள் குட்டப்பா' படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.


Advertisement

மலையாளத்தில் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான படம் 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்'. நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றி தயாரித்து, நடித்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். 'கூகுள் குட்டப்பா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியிடப்பட்டது. இதனை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

image


Advertisement

'கூகுள் குட்டப்பா' படத்தை கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்து வரும் சபரி மற்றும் சரவணன் இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர். இதில் சுராஜ் கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிக்குமார், செளபின் கதாபாத்திரத்தில் தர்ஷன் நடித்துள்ளனர். நாயகியாக லாஸ்லியா நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, மனோபாலா, மாரியப்பன், ப்ராங்ஸ்டார் ராகுல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close