Published : 27,Aug 2021 02:48 PM

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

Heavy-rains-will-continue-for-the-next-four-days-in-Tamil-Nadu-Meteorological-Department

தமிழகத்தில் வரும் 30 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

image

அதேபோல், நாளையும், நாளை மறுதினமும், தேனி, நீலகிரி, கோவை ஆகிய 3 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை கலசப்பாக்கத்தில் 14 செ.மீ மழையும், காஞ்சிபுரம், வேம்பாக்கம் மற்றும் ஆரணியில் தலா 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்