[X] Close

சேலம்: காவல் நிலையத்திற்கு வெள்ளையடிப்பதாக கூறி ரவுடியிடம் நன்கொடை வாங்கிய போலீஸ்?

குற்றம்

காவல்நிலையத்துக்கு வண்ணம் பூச வேண்டுமெனக் கூறி ரவுடியிடம் பணம் வாங்கியதாக எழுந்த புகாரில், காவல் ஆய்வாளர் உள்பட 6 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 


Advertisement

ஊரில் ஓரு பிரச்னை என்றால் காவல்நிலையத்தில் மக்கள் புகார் அளிப்பார்கள். ஆனால் இங்கு ஒரு காவல்நிலையமே புகாரில் சிக்கியிருப்பதுதான் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. சேலம் மாநகர எல்லைக்குட்பட்ட அழகாபுரம் காவல்நிலையம்தான் புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடாவிற்கு அண்மையில் புகார் ஒன்று அனுப்பப்பட்டது. அதில், காவல்நிலையத்திற்கு வெள்ளை அடிப்பதாகக் கூறி சர்க்கரை என்ற சக்கரவர்த்தியிடம் அழகாபுரம் காவல்நிலையத்தில் உள்ள அதிகாரிகள் 40 ஆயிரம் ரூபாய் நன்கொடை வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதுகுறித்து துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டார் காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா. அதில், குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அழகாபுரம் காவல் ஆய்வாளர் கந்தவேல் உள்ளிட்ட காவல்துறையினர் 6 பேரை வெவ்வேறு காவல்நிலையங்களுக்கு பணியிட மாற்றம்செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ரவுடியிடம் பணம் வசூலில் ஈடுபட்டது தெரியவந்ததும், காவல்நிலையத்துக்குக் வண்ணம் பூசுவதற்காக பணம் வாங்கியதாக கூறுகிறார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. பணியிடமாற்றம் என்பது துறைரீதியான நடவடிக்கைதான் என்றும், தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர். ஆனால், இவ்விவாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close