[X] Close

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதி - டாப்சியின் ‘அன்பெல் சேதுபதி’

சினிமா

Vijay-Sethupathi-and-Taapsee-Pannus-Annabelle-Sethupathi-gets-an-OTT-release

விஜய் சேதுபதியின் ‘அனபெல் சேதுபதி’ நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.


Advertisement

வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி விஜய் சேதுபதியின் ’லாபம்’ படம் தியேட்டரிலும், செப்டம்பர் 10 ஆம் தேதி ‘துக்ளக் தர்பார்’ படம் நேரடியாக டிவியிலும் வெளியாகவிருக்கும் நிலையில், விஜய் சேதுபதியின் ’அனபெல் சேதுபதி’ படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கின்றனர் படக்குழுவினர். நடிகர் ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘அனபெல் சேதுபதி’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஹீரோயினாக நடிகை டாப்சி இணைந்திருக்கிறார். யோகிபாபு, ராதிகா, சேத்தன், தேவதர்ஷினி, ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் அதிக காட்சிகள் ஜெய்ப்பூரில் எடுக்கப்பட்டுள்ளது.

image


Advertisement

திகில் காமெடி கதைக்களத்தைக் கொண்ட இப்படம் பல மொழிகளில் வெளியாகிறது. இந்த நிலையில், தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு படம் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது படக்குழு. ஒரே மாதத்தில் விஜய் சேதுபதியின் மூன்று படங்கள் தியேட்டர், ஓடிடி, டிவி என நேரடியாக வெளியாவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்கலாமே: ’கேஜிஎஃப் 2’ படத்துடன் மோதும் ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு

image


Advertisement

Advertisement

Advertisement
[X] Close