[X] Close

கெளதம் மேனனுடன் அடுத்தப் படத்தில் இணையும் சிவகார்த்திகேயன்?

சினிமா

SivaKartikeyan-and-gautham-menon-to-join-together-for-a-new-movie

கெளதம் மேனன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

‘நவரசா’ ஆந்தாலஜி படத்தில் ‘கிடார் கம்பி மேலே நின்று’ படத்திற்குப் பிறகு இயக்குநர் கெளதம் மேனன் சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை இயக்கி வருகிறார். திருச்செந்தூரில் தொடங்கிய இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்து தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில், இப்படத்தை முடித்தப்பிறகு சிவகார்த்திகேயனின் புதிய படத்தை கெளதம் மேனன் இயக்குகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்கலாமே: ”இளவரசே சோழ நாட்டிற்கு உங்கள் பணிகள் நிறைய உள்ளது ”: ஜெயம் ரவி ட்விட்டும் கார்த்தி பதிலும்


Advertisement

தற்போது, ‘டான்’ படத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன் அடுத்த ஆண்டு கெளதம் மேனன் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் இப்படத்தை தற்போது ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை தயாரித்துள்ள வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷன் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.


Advertisement

Advertisement
[X] Close