Published : 10,Aug 2017 01:05 PM
மணல் திருட்டை தடுக்கச் சென்ற போலீஸ் மீது வாள்வீச்சு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மணல் திருட்டைத் தடுக்க ஆய்வுக்குச் சென்ற தனிப்பிரிவு போலீசை அடையாளம் தெரியாத கும்பல் வாள்வீசி தாக்கியுள்ளது.
கீழகன்னிசேரி பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அப்பகுதிக்கு தனிப்பிரிவு போலீசார் ரோந்து சென்றபோது, அங்கு இருட்டில், மறைந்திருந்த அடையாளம் தெரியாத நபர்கள் போலீசார் மீது நீண்ட வாளை வீசியுள்ளனர். அதனால் கழுத்தில் பலத்த காயமடைந்த தனிப்பிரிவு போலீஸ் சதீஷ்குமாரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.