[X] Close

'வாத்தியாரே இது ரத்த பூமி' - ட்விட்டரில் ஆர்யா பதிவும், பசுபதி ரிப்ளையும்!

சினிமா

sarpatta-pasupathy-tweet-going-viral

நடிகர் பசுபதி டிவிட்டரில் தனது கணக்கை தொடங்கியிருக்கிறார். அவரை நடிகர் ஆர்யா வரவேற்ற விதமும், அதற்கு பசுபதியின் பதிலும் வைரலாகி வருகிறது. அப்படி அவர்கள் என்னத்தான் பதிவிட்டார்கள் என்பதை பார்ப்போம்.


Advertisement

வாத்தியாரை அழைத்துக்கொண்டு கபிலன் சுற்றாத இடங்களே இல்லை. ஒற்றை சைக்கிளை எடுத்துக்கொண்டு இருவரும் போகாத நாடுகள் இல்லை; கண்டங்கள் இல்லை. உலகத்தையே ஒரு ரவுண்டு அடித்துவிட்டனர். எல்லாமே மீம்ஸ் கிரியேட்டர்களின் உபயம் தான். சார்பட்டாவில் வரும் அந்த காட்சியை மையமாக வைத்து எக்கச்சக்கமான மீம்கள் உருவாக்கப்பட்டு டிரெண்டில் இருந்தது.

image


Advertisement

பலரும் ரசிக்கும் வகையில் அமைந்திருந்த அந்த மீம்கள், சம்பந்தபட்ட நடிகர்கள் ஆர்யா, பசுபதி இடையேயும் கவனம் ஈர்த்துள்ளது. சார்பட்டா படத்தின் மூலம் பெரிய அளவில் பேசப்பட்ட நடிகர் பசுபதியின் பெயரில் பல்வேறு ஃபேக் ஐடிக்கள் டிவிட்டரில் உலா வந்துகொண்டிருந்தன.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரே நேரடியாக களமிறங்கி, தனது அதிகாரபூர்வ ஐடியை உருவாக்கியிருக்கிறார். அவரை வரவேற்கும் விதமாக நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ''வாத்தியாரே இதான் ட்விட்டர் வாத்தியாரே. பாக்ஸிங்க விட ரத்த பூமி. உன்னோட பேர்ல இங்க நிறைய பேர் இருக்காங்கனு தெரிஞ்சதும், ஒரிஜினல் நான்தான்டானு வந்த பாத்தியா. உன் மனசே மனது தான். வா வாத்தியாரே இந்த வேர்ல்ட் உள்ள போலாம்'' என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள பசுபதி, ''ஆமாம் கபிலா, பாக்ஸிங்கே உலகம்னு இருந்துட்டேன். பரம்பரைக்கு ஒன்னுன்னா மொத ஆளா வந்துருவேன். நான் உன் சைக்கிள்லயே பின்னாடி உட்காந்துக்குறேன். என்ன எல்லா இடத்துக்கும் கூட்டிட்டு போ'' என்று பதிவிட்டுள்ளார். இருவரின் ட்விட்டர் பதிவுகள் வைரலாகி வருகின்றன.


Advertisement


Advertisement

Advertisement
[X] Close