[X] Close

ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர்

இந்தியா

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையுடன் தொடங்குகிறது. புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக துணைநிலை ஆளுநர் உரை தமிழில் வாசிக்கப்பட உள்ளது.
 
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிலையில், முதல்வர் ரங்கசாமி முழு பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்நாளில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றுகிறார். அதனைதொடர்ந்து, என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜவேலு, புதுச்சேரி பேரவையின் துணை சபாநாயகராக பதவி ஏற்றுக் கொள்வார்.
 
image
இதையடுத்து பிற்பகலில், 2021-2022ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்ய இருக்கிறார். புதுச்சேரியில் முதன்முறையாக அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. புதுச்சேரியில் ஆளுநர் உரையும், பட்ஜெட் தாக்கலும் ஒரே நாளில் வருவது இதுவே முதல்முறையாகும்.
 
 

Advertisement

Advertisement
[X] Close