[X] Close

இங்கிலாந்து அசத்தல் பந்துவீச்சு : இந்தியா 78 ரன்களுக்கு ஆல் அவுட் 

விளையாட்டு

India-all-out-for-78-in-the-leeds-test-against-England-in-the-First-innings-of-the-5-match-test-series

லீட்ஸ் - ஹெட்டிங்கிலே மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 78 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி உள்ளது. டாஸ் வென்று கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்திருந்தார். இருந்தாலும் இங்கிலாந்துக்கு இந்த போட்டியில் டாஸ் இழந்தது சாதகமாக அமைந்துள்ளது. 


Advertisement

புஜாரா, கோலி, பண்ட், ஜடேஜா என ஐந்து பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகினர். கே.எல். ராகுல் டக் அவுட்டாகி வெளியேறினார். 

இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் (3), ஓவர்டென் (3), ராபின்சன் (2), சாம் கர்ரன் (2) என அனைத்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close