Published : 25,Aug 2021 06:40 PM
ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவின் போர்ட்ஃபோலியோவில் என்ட்ரி ஆகும் கனரா வங்கி!

இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்களில் முதல் நிலையில் இருப்பவர் முதலீட்டாளர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா. ஃபெடரல் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி வரிசையில் இப்போது கனரா வங்கியும் அவரது போர்ட்ஃபோலியோவில் இணைந்துள்ளது. இதன் மூலம் மொத்தம் மூன்று வங்கிகளின் பங்குதாரராகி உள்ளார் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.
கனரா வங்கியின் ஒழுங்குமுறை ஆவணத்தின் படி இப்போது அவர் அந்த வங்கியில் 1.59% தன்வசம் கொண்டுள்ளார். கடந்த மே மாத தகவலின் படி அவரது சொத்து மதிப்பு சுமார் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என இருந்தது. பங்குச்சந்தையில் அவரது மூவ்களை கூர்ந்து கவனித்து வரும் தனிக் கூட்டம் அவரை பின் தொடர்ந்து வருகிறது. இருந்தாலும் கனரா வங்கியின் பங்குகள் மூன்று சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.