[X] Close

சுங்கச்சாவடி நொறுக்கப்பட்ட வழக்கு: வேல்முருகன் எம்எல்ஏ உட்பட 9 பேருக்கு பிடிவாரண்ட்

குற்றம்

Warrant-for-9-people-including-MLA-Velmurugan-in-toll-gate-atrocity-case

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. உள்பட 9 பேருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உளுந்தூர்பேட்டை முதலாவது குற்றவியல் நீதிபதி சண்முகநாதன் உத்தரவிட்டுள்ளார்.


Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரிகொடா இயக்கத்தின் சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகனுடன் அங்கு வந்திருந்தவர்கள் போராட்டத்தின்போது உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அடித்து நொறுக்கினர். இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ உட்பட 14 பேர் மீது உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இந்த வழக்கு உளுந்தூர்பேட்டை முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக இன்று தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 5 பேர் மட்டுமே ஆஜரானார்கள். அக்கட்சியின் தலைவர் வேல்முருகன், மாவட்ட செயலாளர் ராஜேஷ் உட்பட 9 பேர் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த உளுந்தூர்பேட்டை முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சண்முகநாதன் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் உட்பட 9 பேருக்கு பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close