[X] Close

கொடிகட்டும் போது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த விவகாரம் - ஒப்பந்ததாரர் சிறையிலடைப்பு

தமிழ்நாடு

contractor-detained-due-to-biy-death

விழுப்புரத்தில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்தது, தொடர்பாக ஏற்கனவே சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை தற்போது வெங்கடேசனை கைது செய்து வழக்கு பிரிவுகளை மாற்றியுள்ளது. மரணம் ஏற்படும் என தெரிந்தே அந்த செயலில் ஈடுபடுவது என்ற பிரிவின் கீழ் வழக்கை மாற்றி அமைத்து வெங்கடேசன் சிறையிலடைக்கப்பட்டார்.


Advertisement

விழுப்புரம் - மாம்பழப்பட்டு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நெடுஞ்சாலை துறையில் பணியாற்றும் பொன்குமார் என்பவரது இல்ல திருமண விழா நேற்று நடைப்பெற்றது. இதில் தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொள்ள இருந்த நிலையில் அவரை வரவேற்க திமுக சார்பில் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் இருந்து திமுக கட்சி கொடிகள் அலங்கார தோரணங்கள் நடவு செய்யும் பணிகளில் 10 க்கும் மேற்ப்பட்டவர்கள் ஈடுப்பட்டு இருந்தனர். அதில் விழுப்புரம் ரஹீம் லே- அவுட் பகுதியை சேர்ந்த ஏகாம்பரம் என்பவரது இளைய மகனான விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் 13 வயதே ஆன தினேஷ் என்ற பள்ளி மாணவன் கொடி நடும் பணியில் ஈடுபட்ட வெங்கடேசன் என்பவருடன் வந்திருக்கிறார் வெங்கடேசன் கொடி நடும் பணியில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

அச்சாலையில் மின் பகிர்மான கழகம் செயல்ப்பட்டு வருவதால் அங்கு அதிகளவிலான உயர் மின் அழுத்த கம்பிகள் செல்கின்றன. அப்போது அங்கு இருந்த சிறுவன் நடவு செய்த கொடி கம்பம் மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் உராசியதால் மின்சாரம் தாக்கி சிறுவன் தினேஷ் தூக்கி வீசப்பட்டான். படுகாயம் அடைந்த சிறுவனை உடன் பணி புரிந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரழந்தான்.


Advertisement

இதில் நிலையில்விழுப்புரம் மேற்கு காவல் நிலையம் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்திருந்தது தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் அழுத்தம் காரணமாக இந்த வழக்கு மாற்றி அமைக்கப்பட்டு வெங்கடேசனை மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர் அதன் பின்னர் வெங்கடேசன் மீது மரணம் ஏற்படுத்தும் என்று தெரிந்தே இந்த பணியில் ஈடுபடுவது உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ததுஅதனை தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டதாக வெங்கடேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்


Advertisement

Advertisement
[X] Close